படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நாம் பல காதல்களை பார்த்து இருப்போம்.., சேர்ந்த காதல், பிரிந்த காதல், வாழ்ந்த காதல், நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காதல் என சொல்லி கொண்டே போகலாம்..
ஆனால் இந்த காதல் சற்று வித்தியாசமானது மொழியில்லா காதல்..,
காதலுக்கு மொழியில்லை உணர்வுகளும் புரிதல் மட்டுமே உண்டு.., ஆனால் இந்த கதையில் என்ன என்று படித்து பாருங்கள்..
ஜானு :
ஒரு ஐடி துறையில் வேலை பார்த்து கொண்டிருக்கும் பெண்.., இன்று அவள் வந்து கொண்டிருந்த பாதையில் அவளின் பைக் ரிப்பேர் ஆகி நின்றுவிட்டது.
அப்போ அந்த வழியே வந்த காரை நிறுத்தி அவள் கையை அசைத்து லிப்ட் கேட்கிறாள்.., கார் ஓட்டுனர் இல்லை அது எல்லாம் முடியாது என சொல்லி காரை ஓட்ட.., இதை கவனித்த நம்ப ஹீரோ ராம்..
ராம் :
ஒருதங்க நம்ப கிட்ட உதவி கேட்டா பண்ணனும்.., வண்டிய பின்னடி எடுங்க என சொல்லி ஜானுவிற்கு உதவி செய்கிறார்..
ஜானு :
ஜானுவும் காரில் ஏறியதில் இருந்தே பதட்டமாக இருக்கிறாள்.., ஜானுவின் பதட்டத்தை புரிந்த கொண்ட ராம், அவளுக்கு தண்ணீர் கொடுத்து உதவுகிறார்..
ஆனால் ஜானு அதனை ஏற்று புன்னகையிலே நன்றி தெரிவித்தால்.
ராம் பேச முயன்ற போது.., ஜானு இறங்கும் இடம் வந்து விட்டதால் அவள் அங்கே இருந்து புறப்படுகிறாள்.., அப்போது ஜானுவின் ஐடி கார்ட் கீழே விழ அதை எடுத்த ராம் அவளிடம் கொடுக்கிறார்..
அப்போதும் அவள் ஒரு வார்த்தை பேசாமல்.., ஒரு ஓர புன்னகையிட்டு அங்கிருந்து செல்கிறாள்.
ஜானுவின் உண்மை முகம்
அப்போது காரில் ஏற வந்த போது அவள் அமர்ந்து இருந்த இடத்தில் ஒரு டைரி கிடைத்தது.., அதை எடுத்து படித்த போதே ஜானுவை பற்றிய உண்மை.., அவள் ஏன் யாரிடமும் பேசாமல் இருக்கிறாள் என்பது பற்றிய உண்மை அவனுக்கு தெரிகிறது..
அதை படித்த ராமிற்கு ஒரு பக்கம் சந்தோஷத்தை கொடுத்தாலும்.., மறுபக்கம் அவன் கண்கள் கலங்கிய படி நின்றான்.., ஜானு சென்ற பாதையில் திரும்பி பார்த்த போது அவளை காண வில்லை..,
அப்படி அந்த டைரியில் இருந்தது என்ன..? அவள் ஏன் அனைவரிடமும் பேச மாறுகிறாள் என்பது பற்றி அடுத்த கதையில் படிக்கலாம்…
லோகேஸ்வரி.வெ
தொடரும்…