கறுப்பின மக்களின் விடிவெள்ளி !!
👉கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உலகிலேயே அதிகம் பலம்வாய்ந்த நபர் யாரென்று கேட்டால் பெரும்பாலோனோர் அந்தந்த காலகட்டத்தின் அமெரிக்க அதிபர்களை குறிப்பிடுவர்.
👉ராணுவபலமும், பொருளியல் வளமும் அமெரிக்க அதிபர்களுக்கு அப்படி ஓர் தகுதியை பெற்றுத்தந்திருக்கின்றன.
👉உலகம் இதுவரை கண்டிருக்கும் அமெரிக்க அதிபர்கள் வேறுவிதங்களில் தங்கள் முத்திரையை பதித்திருந்தாலும் அவர்களுள் ஒரு சிலர் தான் உலகுக்கு தேவைப்பட்ட முக்கியமாற்றங்களை கொண்டுவந்தனர். மனிதகுலத்திற்கு மகிமையை தேடித்தந்தனர். அவர்களுள் முதன்மையானவர் இவர்.
👉மனித இனத்திலேயே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்கு, மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கிவிட்டது. பணம், பதவி, நிறம், இனம், மொழி ஆகியவற்றைக் கொண்டு மனிதர்கள் பிரிவதும், பேதம் காணுவதும், அதன் மூலம் கலவரங்கள் மூள்வதும் இன்றும் நடந்து வருகிறது.
👉அவ்வாறு அடிமைப்பட்டு கிடந்தவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்று போராடியவர்கள் உலகில் பலருண்டு. அவர்களில் தலைசிறந்தவர் இவர்தான்.
👉பிறப்பால் எல்லாமனிதர்களும் சமம் என்று அரைகூவல் விடுத்தவர். அடிமை முறையால் சிதைக்கப்பட்டு எலும்புக்கூட்டின் மேல்தோல் போர்த்தியது போலான கறுப்பின மக்களுக்காகப் பிறந்த விடிவெள்ளி… இவர் !!
👉இவர்தான் அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத்தலைவர் ‘ஆப்ரகாம்லிங்கன்” அவர்கள்.
👉செறுப்புதைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்த இவர் பின்னாளில் அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி என்ற உயர்ந்த நிலையை அடைந்தார்.
👉இவர் அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்குமாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக்கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத்தலைவராக வெற்றி பெற்றார்.
👉அடிமைத்தனத்தையும், இனவெறி கொடுமையையும் தனது நேர்மையான செயல்பாடுகளாலும், நெஞ்சுரத்தாலும் ஒழித்துக்கட்டிய வரலாற்று நாயகர் இவர்தான்.
👉அடிமைத்தனத்தையும், இனவெறி கொடுமைகளையும் எதிர்த்தவரலாற்று நாயகரும், அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத்தலைவருமான ஆப்ரகாம்லிங்கன் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம்தேதி அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் பிறந்தார்.
👉இவரது தந்தை தாமஸ்லிங்கன், செவ்விந்தியர்களால் படுகொலை செய்யப்பட்ட இவருடைய தாத்தாவின் நினைவாக இவருக்கு இந்தப் பெயரைச்சூட்டினார்.
👉இவருடைய தாய் நான்சி, சிறுவயதிலேயே ஆப்ரகாம்லிங்கனுக்கு பைபிள் படிக்கக் கற்றுக்கொடுத்தார். அவர் சத்தம் போட்டு பைபிள் படிப்பதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அனைவரும் ஆச்சர்யம் அடைவார்கள். ஏனெனில், 19ம்நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
👉அப்போது அவருக்கு வயது நான்கைக்கூட கடக்கவில்லை. கென்டகி மாநிலம், அமெரிக்காவின் மற்ற மாநிலங்களைவிடப் பொருளாதாரம், கல்வி என எல்லாவற்றிலும் பின்தங்கியிருந்தது.
👉இவர் சிறுவயதிலிருந்தே வயதுக்கு மீறிய உயரத்தோடும், வலிமையோடும் இருந்தார். ஏழு வயதிலேயே துப்பாக்கியால் குறிபார்த்துச் சுடவும், கோடாரியை பயன்படுத்தவும் நன்கு கற்றுக் கொண்டார்.
👉ஆப்ரகாம்லிங்கனுக்கு எல்லாவற்றையும் விட மிகவும் பிடித்தது… படிப்பது… படிப்பது… மற்றும் படிப்பது. ஆப்ரகாம்லிங்கன், காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார். ஆப்ரகாம்லிங்கனுக்கு 9 வயது இருக்கும் போது இவரது தாய் இறந்துபோனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார்.
👉சிறுவயதிலேயே தாயை இழந்த ஆப்ரகாம்லிங்கனுக்கு துணையாய் இருந்தது புத்தகம்தான். ஊரில் யாரிடமாவது எங்கேயாவது புத்தகம் இருக்கிறது என்று தெரிந்துவிட்டால் போதும்… 30 மைல் தூரமாயினும் சரி, 50 மைல் தூரமாயினும் சரி நடந்தே சென்று அதை வாங்கிப் படித்துவிட்டுதான் வேறு வேலை பார்ப்பார்.
தினேஷ்.D
தொடரும்…