திருமணம் முறிவதற்கான 5 முக்கிய காரணங்கள்

DIVORCE-கு முக்கியமான 5 காரணங்கள்…

திருமணம் ஆன சில நாட்கள், சில மாதங்கள் அல்லது சில வருடங்களிலேயே பல தம்பதியனர் எடுக்கும் ஒரு முடிவு “விவாகரத்து”.. சாதரண தம்பதிகள் மூலம் முதல் சினிமாவில் பார்க்கும் நடிகர்கள் நடிகைகள் வரை பார்த்து இருப்போம்.. அதற்கான காரணம் கேட்டால் “கருத்து வேறுபாடு” என சொல்லுவார்கள்.. ஆனால் அது மட்டும் காரணமல்ல..

விவாகரத்துக்கான 5 காரணங்களை இதில் பார்க்கலாம். பொதுவாக, இந்தியாவில் விவாகரத்து விகிதம் அதிகரித்து வருகிறது. வடஇந்திய பகுதிகளில் குறட்டை விட்டதெற்கெல்லாம் விவாகரத்து
குடுத்துருக்காங்க. அந்த வகையில், விவாகரத்துக்கான முதல் 5 காரணங்களை இதில் படிக்கலாம்..

  1. திருமணத்திற்கு முன்பு ஒன்றாகவும் அதாவது கணவன் மனைவியாக வாழ்ந்து பின்னர் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்தவகை மக்கள் விவாகரத்து பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதாவது 33% பேர் விவாகரத்து கோருகின்றனர்.

திருமணத்திற்கு முன் லைவ்-இன் இல் வாழ்ந்து விட்டு, பின் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்,
இதை திருமணமானவர்களுடன் ஒப்பிட்டும் பார்க்கையில், லிவிங்கில் வாழ்ந்தவர்கள் விவாகரத்து விகிதம் மிக அதிகம் என சொல்லப்படுகிறது.

இப்போதைய கலாசாரத்தில் பலர் லைவ்-இன் தான் சிறந்தது என்று வாழத் தொடங்குகிறார்கள். லைவ்-இன் இல் இருந்துவிட்டு நீங்கள் திருமணம் செய்து கொண்டால் விவாகரத்து ஆகிவிடுமோ என்று பயமுறுத்த விரும்பவில்லை. ஆனால் புள்ளிவிவரங்களின்படி, அவர்கள் சொல்வது இதுதான்.

  1. இது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் புள்ளி விவரங்களின் படி, விவாகரத்து பெற்றவருடன் நாம் நட்பு வைத்திருந்தால், விவாகரத்து பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என 75% புள்ளிவிவரங்கள்படி சொல்றாங்க.

அதாவது உங்கள் நண்பர்கள் கும்பலில் அதிகபட்ச விவாகரத்து பெற்றவர்கள் இருந்தால், எளிதாக விவாகரத்து பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதை எப்படி ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை.

நண்பர்கள் அனைவரிடம் நாம எல்லோரிடமும் பேசுறோம் பழகுறோம், அவர்களுடன் நேரத்தை செலவிடுகிறோம். அதற்காக அவர்களை விவாகரத்து வாங்கினவர்கள் என ஒதுக்கி வைக்க முடியாது.

அப்படி யாரையும் விட்டு வைக்க முடியாது. ஆனால் புள்ளிவிபரங்களின்படி நீண்ட நேரம் அப்படி ஒரு வட்டத்தில் இருந்தால், நீங்கள் எளிதாக விவாகரத்து பெறுவீர்கள் என்று கூறுகிறார்கள். இதை பற்றிய கருத்துக்களை எங்களுக்கு கீழே தெரியப்படுத்துங்கள்.

  1. தம்பதிகளுக்கு இடையேயான தொடர்பு நிறுத்தப்பட்டால், விவாகரத்து எளிதாக நடக்கும். எனவே, 75% தகவல் தொடர்பு இல்லாததால் விவாகரத்துக்கான வாய்ப்பு இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பொதுவாக, தம்பதிகளிடையே பேசுவதற்கு பல விஷயங்கள் உள்ளன. சில சமயங்களில் திருமணத்திற்கு பிறகு சண்டை போடுவார்கள்.

திருமணத்திற்கு பிறகு நீண்ட நேரம் காத்திருந்து அதிகம் பேசலாம் என பெரியவர்கள் கூறியுள்ளனர். ஆனால் சில காரணங்களால் பேசுவதை நிறுத்தினால் அது விவாகரத்தில் முடியும். ஏனென்றால் ஒரு நபர் என்ன நினைக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் மனதில் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்குப் புரியாது. எப்படிப்பட்ட உறவாக இருந்தாலும் இருவருக்கும் தொடர்பு இல்லாதது விவாகரத்துல முடியும்னு கருத்து கணிப்புல சொல்றாங்க. ஒரு குடும்பம் அல்லது தம்பதியினர் இப்படி பேசாம இருந்தால் விவாகரத்து அதிகமாக உள்ளதாக சொல்லப்படுது .

  1. 60% விவாகரத்து பெற்ற தம்பதிகள் குழந்தையின்மை விவாகரத்துக்கான காரணம் என்று கூறுகிறார்கள். இதுவரை வந்த கருத்துக்கணிப்பு படி , 60% விவாகரத்து பெற்ற தம்பதிகள், குழந்தையின்மை காரணமாக விவாகரத்துக்கான காரணம் என்று கூறுகிறார்கள். ஒன்று கணவனால் குழந்தை கொடுக்க முடியாமல் போவது அல்லது ஒரு மனைவியால் குழந்தை கொடுக்க முடியாமல் போவது உள்ளிட்ட காரணங்களால் பல குடும்பங்கள் பிரிந்துள்ளதாக சொல்றாங்க.
  1. குடும்ப வன்முறையால் 24% விவாகரத்து ஆகுதுன்னு சொல்றாங்க . பல குடும்பங்கள் பிரிந்து கிடப்பதற்கு இதுவே காரணம். யாரும் யாரையும் அடிக்க கூடாது. அந்த வகையில், இந்தியாவில் குடும்ப வன்முறையால் விவாகரத்து விகிதங்கள் அதிகம். எனவே இந்த காரணங்களை எல்லாம் சரி செய்யும் வகையில் விவாகரத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த வீடியோவைப் பற்றிய உங்கள் கருத்து இருந்தால், கீழே உள்ள கருத்துப் பெட்டியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
Stay connected
By Logeshwari V

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *