ஆபாசப் படத்தில் ஏன் நடித்தேன். நடிகை ஸ்வர்ணமால்யா விளக்கம்!
“நான் சினிமா துறையில் இயக்குனர் மணிரத்தினத்திடம் ஒரு படத்தில் நடித்து விட்டதால் எல்லோரும் அவர் போல இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் நான் சினிமாவைப் பற்றி தெரியாமல் எடுத்த ஒரு முடிவால் பல்வேறு பிரச்சனைகள் வந்தது. ஒரு படத்தில் என்னிடம் நடிக்க கேட்டார்கள். நானும் சரி என்று சொல்லிவிட்டேன். அந்த படத்தில் நான் பத்து நிமிடங்கள் தான் நடிக்கப் போகிறேன் ஹெஸ்ட் ரோல் என்று சொன்னார்கள். நானும் சரி என்று சொல்லி இருந்தேன்.
ஆனால் அந்த படம் ஆபாச படம் அதில் நடிக்க கூடாது என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. அந்த படம் டப்பிங் படம் தான் அதற்கான ஒரிஜினல் சிடியை என்னிடம் கொடுத்தார்கள் நானும் விளையாட்டு போக்கில் அதைக் கூட பார்க்கவில்லை. நம்முடைய காட்சிகள் குறைவாக தானே இருக்கிறது சொன்னதை செய்யப் போகிறோம் என்று நினைத்து விட்டேன். அதற்கு பிறகு போட்டோ சூட் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
அப்போது எனக்கு அது ஆபாச படம் என்று தெரிந்தது. ஆனாலும் இதில் நடிக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்தபோது போட்டோ சூட் முடிந்து விட்டது. அதற்கு பிறகு கூட நான் காண்ட்ராக்ட் கேன்சல் செய்திருக்கலாம். ஆனால் அது எனக்கு அந்த நேரத்தில் பெரிதாக தெரியவில்லை. அதற்கு பிறகு நான் ஆபாச படத்தில் நடித்து விட்டேன் என்று சில விமர்சனங்கள் வந்தது. இது நான் தெரியாமல் செய்த தவறு தான் இதைவிட பெரிய தவறு என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த திருமணம் தான்.
அதோடு ஒப்பிடும்போது இதுவெல்லாம் சின்ன விஷயங்கள் தான். அதுபோல நான் அமெரிக்காவில் என்னுடைய கணவரோடு பிரச்சனை ஏற்பட்டு இந்தியாவிற்கு திரும்பி வந்த நேரத்தில் தான் நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் பிரபுதேவா, விஜயகாந்த் இருப்பார்கள். நான் தங்கச்சி கேரக்டரில் நடித்திருந்தேன். படம் முழுக்க நான் அழுது கொண்டிருக்கும் கேரக்டர்.
எனக்கு படத்தில் அழுவது கொஞ்சம் கூட பிடிக்காது. அதனால்தான் நான் சீரியலில் இருந்து கூட விலகி இருந்தேன். ஆனால் இந்த படத்தில் நான் அழுது கொண்டே இருக்கும் போது எனக்கு கஷ்டமாக இருக்கும்.. அழுகை சீன் நடிக்கவே வராது. அது பற்றி நான் இயக்குனரிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன். ஒரு இடத்திலாவது நான் சிரிக்கிற மாதிரி காட்சிகள் வைங்க.. ஏற்கனவே நிஜ வாழ்க்கையில் ரொம்ப அழுது கொண்டிருக்கிறேன் என்று கேட்பேன்.
சீரியலிலும் எனக்கு அதிகமான வாய்ப்புகள் வந்தது. அதிலும் அதிகமா அழுத மாதிரிதான் எனக்கு காட்சிகள் இருந்தது. அதனால் தான் அதற்குப் பிறகு நடிப்பது குறைத்துக்கொண்டேன். எனக்கு சினிமாவில் சரியான வழிகாட்டுதல்கள் கிடையாது.
என்னுடைய குடும்பத்தில் என்னுடைய தாத்தா சினிமாவில் தான் இருந்தார். ஆனால் எனக்கு பெரிதாக எதுவும் சொல்லித் தரவில்லை. அதனால் தான் நான் சில தவறான முடிவுகள் எடுத்து இருந்தேன் “- என சமீபத்தில் நடிகை ஸ்வர்ணமால்யா பேசியதாக பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது