இந்த வாரம் ரிலீஸ் ஆன விஜய் சேதுபதி நடிச்ச மகாராஜா திரைப்படத்தோட விமர்சனத்தை தான் இப்ப நம்ம பாக்க போறோம்.
விஜய் சேதுபதி நடிச்ச மகாராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றிருக்குனு சொல்லலாம். விஜய் சேதுபதியோட 50 படம் அவருக்கு பெரிய ட்ரீடா அமைஞ்சுருக்கு.
விஜய் சேதுபதி நடிப்ப பத்தி சொல்லவே வேணாம். அவரோட நடிப்ப அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிருக்காருனு சொல்லலாம். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிச்ச திவ்யபாரதி சில நிமிட காட்சிகள்ல வந்தாலும் சிறப்பா நடிச்சிருக்காங்க.
விஜய் சேதுபதி அவரோட பொண்ண கற்பழிச்சவங்கள எப்படி பழிவாங்குறாருனு தான் கதைக்களம் இருக்கு.
அனுராக் காஷ்யப் அவரோட நடிப்ப மிக அருமையா வெளிப்படுத்திருக்காரு.
விருமாண்டி அபிராமி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் இந்த படம் மூலமா தமிழ் சினிமாக்கு ஒரு ரீ என்ட்ரி னு சொல்லலாம். நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் , காமெடி நடிகர் சிங்கம் புலி , முனிஸ்காந்த் இவங்க எல்லாரும் ஒரு படி மேலயே அவங்க நடிப்ப வெளிப்படுத்திருக்காங்க.
எழுத்தாளர் மற்றும் இயக்குனரான நித்திலன் ஸ்வாமிநாதன் திரைக்கதையை அருமையா கொடுத்துருக்காருனு சொல்லலாம்.
படத்தோட பாதிக்குமேல் ரசிகர்களுக்கு ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் னு சொல்லலாம். பின்னணி இசையும் சரி , சண்டைக்காட்சிகளும் சரி , மற்ற பின்னணி வேலைகளும் மிக அருமையா பண்ணிருக்காங்க. இந்த படத்தை குடும்பமா பார்க்க போகலாம். மொத்தத்துல மகாராஜா மகாராஜா தான்..