சாதி மத அடிப்படையில் உத்தரவு..! நீதிபதி ஜெயச்சந்திரன்..?

நான் சாதி மத அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க மாட்டேன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்..

தமிழ்நாடு நிதிநிறுவன மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் 35கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் ஏமாற்றியதை தொடர்ந்து வழக்கு ரத்து செய்யக்கோரி விண்ணப்பித்திருந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது..

அப்போது முதலீட்டர்களை சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீதான பணத்தை விற்று திருப்பி நிறுவனத்தில் ஒப்படைப்பு தான் தார்மீக பொறுப்பு. அதையெல்லாம் மறைத்து மனுக்கள் திரும்பப்பெற அனுமதி வழங்கப்பட்டிருப்பது மிகவும் அதிருப்தி அளிக்கிறது என அவர் கூறினார்.. இதையெல்லாம் மறைத்து தான் மனுக்களை திரும்பப் பெற அனுமதிக்க பட்டிருப்பதாக அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அப்போது நீதிமன்ற செயல்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் “சில வழக்கறிஞர்கள் குற்றவாளிகளை பாதுகாக்க, நீதிமன்றதிற்கு வரும்போது சில நீதிபதிகள் அவர்களுக்காக உத்தரவுகளை பிறப்பிக்கிறார்கள். நீதிபதிகளின் சமூகத்தைச் சாராத சில வழக்கறிஞர்கள், நீதிபதியின் சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே மூத்த வழக்கறிஞர்களாக அழைக்கின்றனர்.

பணம், ஒரு சாதகமான தீர்ப்பு பெறுவதற்காக சில வழக்கறிஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக”. நீதிபதி ஜெயச்சந்திரன் இவ்வாறே கருத்து தெரிவித்தார்.

சாதி மத அடிப்படையில் உத்தரவு :

மேலும் அதனை தொடர்ந்து பேசிய அவர், “ஜாதி, மத அடிப்படையில் நான் தீர்ப்பு வழங்கமாட்டேன். ஜாதி , மத நம்பிக்கையின் அடிப்படையிலான உத்தரவுகளை நான் பிறப்பிக்க மாட்டேன். ஒரு சில வழக்கறிஞர்கள் குறுக்கு வழியில் சில தீர்ப்புகளை வழங்குகிறார்கள்.

நீதிபதிகளுக்கு எதிரான் போரை நான் தொடங்கியுள்ளேன். சில நீதிபதிகள் என்ன மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்கிறார்கள். அத்தகைய நீதிபதிகளுக்கு ஆதரவான சில தீர்மானங்களை வழக்கறிஞர்கள் நிறைவேற்றுவதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். வழக்கு விவாதத்தின் போது நீதிபதி ஜெயச்சந்திரன் பதிவிட்ட இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Stay connected
By Logeshwari V

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *