சில தினங்களுக்கு முன்பு சூரி-யின் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கருடன். படம் வெளியாகி நல்ல ஹிட் கொடுத்தது. சூரி சினிமா வாழ்க்கையில் கருடன் திரைப்படம் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது. வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில் கருடன் படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் இந்த படத்திற்குப் பிறகு அடுத்ததாக லெஜெண்ட் சரவணனை ஹீரோவாக வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்க இருக்கிறார்.
இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார். ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் என்ற படத்தை இயக்கினார். அந்தப்படமும் அவருக்கு நன்கு கைகொடுத்தது. அதற்கு அடுத்தபடியாக மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கி சட்டை என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் FLOP ஆனது.
MNEWS24
அதன் பின் துரை செந்தில்குமார். தனுஷுடன் இணைந்து கொடி, பட்டாஸ் போன்ற படங்களையும் இயக்கினார். இந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பதிவு செய்யாததால் மீண்டும் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். விடுதலை படத்தில் சூரியுடன் ஏற்பட்ட பழக்கம் இப்போது கருடன் திரைப்படம் உருவாக காரணமாக அமைந்தது.
இந்நிலையில் மீண்டும் வெற்றியை கொடுப்பேன் என அவர் எடுத்த படம் தான் கருடன். எதிர்பார்த்ததை விட மிக பெரிய வெற்றி இந்த படத்திற்கு கிடைத்தது. அதை தொடர்ந்து லெஜெண்ட் சரவணாவை வைத்து ஒரு படத்தை இயக்க போவதாக அப்டேட் கொடுத்துள்ளார். இந்த படத்திற்காக லெஜெண்ட் சரவணன் வேற மாதிரி உருமாறி இருக்கிறார். லெஜெண்ட் சரவணன் நடித்த அந்த லெஜெண்ட் படம் FLOP ஆனாலும் இந்தப் படத்திற்காக தன்னை வேற மாதிரி மாற்றியிருக்கிறார் என சொல்லலாம்.
அவருடைய இந்த புதிய தோற்றம் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கருடன் படத்தை போல இந்த படமும் மிகப்பெரிய சண்டை காட்சிகளை மையமாக கொண்டு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அந்த தோற்றம் தான் லெஜெண்ட் சரவணனிடம் காணப்படுகிறது. இந்த படத்தின் லெஜெண்ட் சரவணாவின் பர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என சொல்லலாம்.