தான் பள்ளி பருவத்தில் காதலித்த பெண் மீண்டும் தன்னுடைய வாழ்வில் வந்த சந்தோஷத்தில் இருந்த ராம்.., மீண்டும் ஜானுவிடம் தன்னுடைய காதலை சொல்லும் போது கன்னத்தில் ஒரு அரை விழுகிறது பார்த்தல் அது கனவு..
சரி கனவு தானே பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டு ஜானுவிடம் சொல்ல வருகிறான்.. ஜானுவை பார்த்தபடி நின்றான் ராம்..
அப்போது ஜானு மயங்கி விழ.. ராம் பதறி அடித்துக்கொண்டு அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறான். அங்கு ஜானுவை மருத்துவர்கள் பரிசோதித்து ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்கிறார்கள்..
அது என்னவென்றால் சிறுவயதில் ஜானுவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் பேச்சு வராமல் போனது மட்டுமின்றி அவளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதவாது தலையில் உள்ள நரம்பில் காயம் ஏற்பட்டு மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் சரியாக செல்லாததால் அவளுக்கு கொஞ்சம் கோபம் அதிகமானாலும், எமோஷன் அதிகமானாலும் அவள் உயிருக்கே ஆபத்து என மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.
அதே சமயம் ஜானுவிற்கு பேச முடியாத பிரச்சனையையும் சரி செய்து விட முடியும் என மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.. அவளுக்கு சிறு வயதில் ஒரு அதிர்ச்சியில் பேச்சு வராமல் போனதால் அதை சரி செய்து விட முடியும் என மருத்துவர்கள் சொன்னதை கேட்டு சந்தோசம் அடைகிறான்..
ஆனால் ஜானுவிற்கு பேச்சு வர வேண்டும் என்றால் அதை ஆங்கில மருத்துவத்தால் குணப்படுதுவதை விட சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என சொன்னதை கேட்டு.., அவளுக்கு பேச்சு வர வைக்க ராம் முயற்ச்சி செய்கிறான்.
தலையில் ஏற்றபட்ட பிரச்சனையை மறைத்த ராம்.., ஜானுவிற்கு பேச்சு வரவைக்க முடியும் நாம் அதற்காக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென கூறி அவளை அழைத்து செல்கிறான்..
48 நாட்கள் தங்கி ஜானுவிற்கு மருத்துவம் பார்கிறார்கள்.., அதற்கான மருத்துவ செலவுகளை ராம் பார்த்துகொள்கிறான். 48 நாட்கள் முடிந்தது. இதில் ஒரு சிலருக்கு மட்டுமே பேச்சு வரும் ஒரு சிலருக்கு பேச்சு வாராது என சித்த வைத்தியர் சொன்னதால்..,
ஜானுவிற்கு பேச்சு வர வேண்டும் என்று அங்குள்ள மலைகோவில் விநாயகருக்கு “ராம்” முட்டி போட்டு நடந்து சென்று அங்க பிரதர்சனம் செய்கிறான்..
இதை பற்றி ராம் நண்பர்கள் அவளுக்காக நீ ஏண்டா இப்படி பண்ற ஒரு வேலை அவ விட்டுட்டு போயிட்டா என்னடா பண்ணுவ… விடு மச்சான் சொல்லுறாங்க..
ஆனா ராம் அவ எனக்கு வெறும் காதலி மட்டும் இல்லை டா.., எனக்கு அவ குழந்தையும் கூட அவங்க அப்பா அம்மா பண்ண வேண்டியதை அப்பா அம்மா ஸ்தானத்தில் இருந்து நான் பண்ற மச்சான்..
ஒரு வேலை அவ என்ன விட்டுட்டு போனா கூட கடைசி வரைக்கும் அவளையே நினச்சுட்டு இருப்பன் சொல்ல பின்னே ஜானு கண் கலங்கிய படி நிற்கிறாள்..
ஜானுவிற்கு பேச்சு வந்து விட்டதா..? இந்த ராம் தான் தன்னுடைய சிறு வயது காதலன் என ஜானுவிற்கு தெரிந்துவிட்டதா..? தெரிந்தால் அவள் என்ன சொல்லுவாள் என அடுத்த கதையில் படிப்போம்…