நடிகை சமந்தா தனக்கு தசை அழற்ச்சி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதில் இருந்து தனது வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். கடுமையான உடற்பயிற்சிகளை செய்வது, சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொள்வது , உணவு முறைகளை மாற்றுவது என தனது அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளில் சமந்தா ஆன்மிக ரீதியாக தன்னை அதிகம்ஈடுபடுத்தி வருகிறார். இந்தியா முழுவதும் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்று அந்த அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்.
ஒரு நல்ல குரு கிடைப்பது ரொம்ப அரிது
சமீபத்தில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சென்ற சமந்தா தனது தியானம் குறித்த அனுபவங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஈஷா யோகா மையத்திற்கு வந்த மற்ற ஆர்வலர்கள் உடன் சேர்ந்து தியானம் செய்த சமந்தா தனத் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த பதிவில் அவர் நம்மில் பலர் குரு அல்லது வழிகாட்டியைத் தேடுகிறோம்.
உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்யும் தீவிரம்,
உணர்வு மற்றும் இரக்கம் கொண்ட ஒருவரை நீங்கள் கண்டால்,
அது ஒரு அரிய பாக்கியம்.
ஞானம் வேண்டும் என்றால் உலகில் தேட வேண்டும்.
அன்றாட விஷயங்கள் உங்கள் மீது வீசப்படுவதால், அது எளிதாகிவிட்டது.
நீங்கள் நினைக்கிறீர்கள்… இது சாதாரணமானது என்று நினைக்கிறீர்கள்.
இது சாதாரணமானது அல்ல.
அதற்காக கடினமாக உழைக்க வேண்டும்.
மேலும் தெரிந்தால் மட்டும் போதாது.
இந்த அறிவை செயல்படுத்துவதே உண்மையில் முக்கியமானது.” என்று சமந்தா இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.