விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பாலைய்யா.. சர்ச்சையை கிளப்பியுள்ள வீடியோ..!
Prasanth0 Comments
மது அருந்திவிட்டு நடிகர் பாலகிருஷ்ணா பொது நிகழ்ச்சியில் பங்கேற்றதாக எழுந்துள்ள சர்ச்சை இணையத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற தெலுங்கு திரைப்படத்தின் விளம்பரதாரர் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலகிருஷ்ணா கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே அவர் கோபமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் அமர்ந்திருந்த இருக்கையின் கீழ் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலில் மதுபானத்தை கலந்து தனது கால் அருகில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது, இதுகுறித்த வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக பரவிவருகிறது.