சனாதான ஒழிப்பு..! உதயநிதிக்கு பெங்களூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு..!

கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என கூறியுள்ளார். அவர் சனதானம் என்ற வார்த்தையை ஒழிக்க வேண்டும் என சொன்ன வார்த்தையை மாற்றி சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என சொன்னதாக பாஜகவினர் ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் அது பெரும் சர்ச்சையை கிளப்பியது..

அதன் பின் உதயநிதி ஸ்டாலினிற்கு எதிராக பல்வேறு இடங்களில் இருந்து பாஜக தரப்பில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து கர்நாடகா மாநிலம் பெங்களூர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக சமூக ஆர்வலர் பரமேஸ் என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலினை ஜூன் 25-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் பெயரில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெங்களூரில் 42-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ் திரேட் முன்பு ஆஜரானார். அதன் பின் நீதிபதிகள் விசாரணை முடிந்த பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை ஒத்திவைத்துள்ளது.

Stay connected
By Logeshwari V

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *