தன் முன்னால் காதலியை பார்த்த சந்தோஷத்தில் இருந்த நம்ம ராம்.., பெரும் குழப்பத்தில் இருக்க ஆரம்பிக்கிறான். தன் காதலை ஏற்றுக்கொள்வாள இல்லை தற்போது அவள் மனதில் யாரவது இருகிறார்களா என்ற குழப்பத்தில் இருக்கிறான் ராம்.
நண்பர்களுடன் ஆலோசனை :
ஜானுவை பார்த்த சந்தோஷத்தில் இருந்த ராம்.., தனது நண்பர்களுக்கு கால் செய்து ஜானுவை பார்த்தது பற்றி பேசுகிறான்.., அதே சமயம் அவள் மனதில் யாரவது இருகிறார்களா என தெரிந்துகொள்ளவும் ஆசை படுகிறான் ராம்.
ஜானுவுடன் சந்திப்பு :
அன்றைய நாள் முழுதும் ராமிற்கு ஜானுவை பார்த்த சந்தோஷத்தில் தூக்கமே வரவில்லை.., மீண்டும் ஜானுவை பார்க்க ஆசைப்பட்ட ராம்..,
ஜானுவின் ஆபிஸிற்கு சென்று அவளை சந்திப்பதற்காக போகிறான்.., ஆனால் அங்கு ஜானு இல்லை அவள் வேலையை ரிசைன் செய்து விட்டு போய்விட்டதாக அங்கிருந்தவர்கள் சொல்ல..,
சற்று மன வருத்ததுடன் அங்கிருந்து வெளியே வருகிறான். சோகப் பாடல்களை கேட்டுக்கொண்டு அவளை நினைத்துக்கொண்டு ராம் அவளின் புகை படத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
அதன்பின் ராம் ஆபிஸ்க்கு ஜானு வேலை கேட்டு வருகிறாள்.., இவ்வளவு நாள் எங்கையோ இருந்த தன் முன்னால் காதலி இப்போ தன்னை தேடி வருகிறாள் என்றால் அது கடவுள் அவளை மீண்டும் அவன் வாழ்க்கையில் சேர்பதற்காக என எண்ணிய ராம் சந்தோஷத்தில் இருகிறான்.
ராம் ஒரு பிரபல பத்திரிக்கையில் சேனல் ஹெட்டாக இருப்பதால்.., ஜானு வேலைக்கேட்டு வந்ததும் அவளுக்கு ரிப்போர்ட்டராக வேலைகொடுகிறான்.
தன்னால் பேச முடியாது என ஜானு சொல்லும்போது..,
ராம் :
உன்னால் பேச முடியாவிட்டாலும் நீ எழுதும் கவிதை கதை மற்றும் கட்டுரைகளை உலகம் பார்க்க வேண்டும் என ராம் சொல்லி அவளை வேலைக்கு சேர்கிறான்.
ராமின் பேச்சில் நம்பிக்கை கொண்ட ஜானு அங்கே சேர முடிவெடுக்கிறாள்..,
ஆபிஸ் application form-ல் சிங்கிள் என ஜானு டிக் செய்தது அவனுக்கு இன்னும் சந்தோஷத்தை கொடுத்தது..,
சந்தோஷத்தில் அவன் கிட்டே நெருங்கியதும்.., ஜானு போனிற்கு ஒரு அழைப்பு வந்தது அதை பார்த்ததும் ராம் உடைந்து போகிறான்..
அப்படி ராம் உடைந்து போகும் அளவிற்கு என்ன போன் கால் வந்தது.., அந்த எண்ணில் இருந்த பெயர் என்ன என்பது பற்றி அடுத்த கதையில் படிக்கலாம்.
லோகேஸ்வரி.வெ
தொடரும்…….