கரகாட்டக்காரன் கனகாவின் வாழ்க்கையை காலி செய்த அந்த நபர்…

தமிழில் ஒரு வருடத்திற்கும் அதிகமாக ஓடி பெரும் ஹிட் கொடுத்த கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா. இந்த திரைப்படத்தில் முதலில் நடிகை சுகன்யாதான் கதாநாயகியாக நடிக்க இருந்தார்.

ஆனால் இயக்குனர் கங்கை அமரன்தான் கனகாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். இந்த திரைப்படத்திற்கு பிறகு கனகாவிற்கு தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வர துவங்கின. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் அவரது குடும்பத்தினராலேயே அவரது வாழ்க்கை பிறகு மோசமான சம்பவமும் நடந்தது. கனகா அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே அவரது பெற்றோர்கள் தொடர்ந்து அவரை திரைப்படங்களில் நடிக்க செய்து வந்தனர் என்று கூறுகிறார் பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா சிறு வயது முதலே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் வாய்ப்புகள் கிடைத்ததுமே தொடர்ந்து ரஜினிகாந்த் சரத்குமார் மோகன்லால் என்று பெரிய புள்ளிகளுடன் நடித்து வந்தார்.

ஆனால் 1989இல் சினிமாவிற்கு வந்த நடிகை கனகா 2000-க்கு பிறகு மொத்தமாக சினிமாவில் இருந்து விலகிவிட்டார். ஏன் விலகினார் என்று பார்க்கும் பொழுது அவருடைய அம்மாதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து அவர்களது வீட்டில் பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது என்று கூறப்படுகிறது. இதற்கு நடுவே கர்நாடகாவின் அரசியல் புள்ளி ஒருவருக்கு பணம் வாங்கிக் கொண்டு கனகாவை திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஏனெனில் கனகாவின் நட்சத்திரத்தில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அரசியல் வாழ்க்கையை அவருக்கு நன்றாக இருக்கும் என்று கூறிய காரணத்தினால் இந்த திருமணத்தை செய்திருக்கின்றனர். ஆனால் பேருக்கு மட்டும் தான் இந்த திருமணம் நடந்திருக்கிறது.

அதற்கு பிறகு கனகாவே அந்த தாலியை கழற்றி வைத்து விட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான கனகா இப்போது வரை தனிமையில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு வீட்டு வேலைகளை செய்வதற்கு மட்டும் ஒரு நபர் வந்துவிட்டு செல்வார் என்று கூறப்படுகிறது.

இதற்கு நடுவே அவருடைய தந்தை மற்றும் தாய் இருவருமே இறந்து போக தற்சமயம் அவர்களுடைய ஆவிகளுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறுகிறாராம் கனகா. அந்த அளவிற்கு அவரது மனநிலை என்பது மிகுந்த மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

சமீபத்தில் அவரை சந்தித்த நடிகை குட்டி பத்மினி தனது நெடுநாள் தோழியை மீண்டும் சந்தித்ததாக பதிவிட்டிருந்தார். அதன் பிறகுதான் என்ன நிலையில் கனகா இருக்கிறார் என்பதே வெளி உலகத்திற்கு தெரிய தொடங்கியது.

Stay connected
By Prasanth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *