Kallakurichi

பலி எண்ணிக்கை 33 தாண்டியது – முதலமைச்சர் அவசர ஆலோசனை?

பலி எண்ணிக்கை 33 தாண்டியது – முதலமைச்சர் அவசர ஆலோசனை?

கள்ளக்குறிச்சி கள்ளசாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 33 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக கள்ளசாராயம் விற்பனை நடந்துள்ளது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர் . கள்ளச்சாராய ஊரல்கள் - கோப்பு படம் இந்நிலையில் கள்ளசாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 33ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சம்பவம் பற்றி அறிந்ததும் சுகாதாரத்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் கருணாபுரத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். சட்டப்பேரவையின் இன்றைய அலுவல் கூட்டம் முடிவடைந்த உடன் தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் காவல்துறை…
Read More

கள்ளக்குறிச்சியில் அதிகரிக்கும் கள்ளச்சாராய உயிரிழப்புகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணியிடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் பகுதியில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் நீண்ட நாட்களாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக தொிகிறது. இங்கு நடைபெறும் சாராய விற்பனை குறித்து அப்பகுதி மக்கள் அதிகாாிகளுக்கும் தகவல் தொிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சாராயம் விற்பனை தொடா்ந்து நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியை சோ்ந்த சிலா், அப்பகுதியில் விற்பனை செய்யப்படும் சாராயத்தை குடித்ததாக கூறப்படுகிறது. கள்ளச்சாராயம் குடித்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிற்று எரிச்சல் வந்ததையடுத்து அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் முதற்கட்டமாக கணேசன் மகன் பிரவீன், தர்மன் மகன் சுரேஷ் , சேகர், ஜெகதீசன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராய ஊரல்கள் -…
Read More