26
Jun
நான் சாதி மத அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க மாட்டேன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு நிதிநிறுவன மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் 35கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் ஏமாற்றியதை தொடர்ந்து வழக்கு ரத்து செய்யக்கோரி விண்ணப்பித்திருந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது முதலீட்டர்களை சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீதான பணத்தை விற்று திருப்பி நிறுவனத்தில் ஒப்படைப்பு தான் தார்மீக பொறுப்பு. அதையெல்லாம் மறைத்து மனுக்கள் திரும்பப்பெற அனுமதி வழங்கப்பட்டிருப்பது மிகவும் அதிருப்தி அளிக்கிறது என அவர் கூறினார்.. இதையெல்லாம் மறைத்து தான் மனுக்களை திரும்பப் பெற அனுமதிக்க பட்டிருப்பதாக அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது நீதிமன்ற செயல்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் “சில வழக்கறிஞர்கள் குற்றவாளிகளை பாதுகாக்க, நீதிமன்றதிற்கு வரும்போது சில நீதிபதிகள் அவர்களுக்காக உத்தரவுகளை பிறப்பிக்கிறார்கள். நீதிபதிகளின் சமூகத்தைச் சாராத சில வழக்கறிஞர்கள், நீதிபதியின் சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே மூத்த வழக்கறிஞர்களாக அழைக்கின்றனர்.…