முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கள்ளச்சாராய உயிரிழப்பு – கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு

கள்ளச்சாராய உயிரிழப்பு – கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு

தமிழக சட்டசபை இன்று காலை கூடியது அவையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தலைமை செயலகம் தமிழ்நாடு சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருப்பினும் மக்களவைத் தேர்தல் காரணமாக மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடத்தப்படாமல் பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவை கூடியதும், விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என்றார். இதைத் தொடர்ந்து அவையின் இன்றைய நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.
Read More