தான் காதலித்த பெண் தன் அலுவலக்திலேயே வேலைக்கு சேர்ந்த சந்தோஷத்தில் இருந்த ராம் அவளின் அருகில் சென்ற போது அவளுக்கு ஒரு போன் கால் வருகிறது.. அதுவும் அந்த வீடியோ காலில்… “MY Love” என வந்ததால் மிகவும் பதட்டம் அடைகிறான்..
அந்த கால்லை ஜானு எடுத்த போது அதில் ஒரு 3வயது குழந்தை ஜானு-வை பார்த்து அம்மா.. அம்மா என கூப்பிட்டான். ராமிற்கு இன்னும் பயம், ஒரு வேலை ஜானுவிற்கு திருமணம் ஆகி இருக்குமோ என்று.. அதன் பின் அதே வீடியோ காலில் ஜானுவின் அக்கா மற்றும் அம்மா பேசிய பின் தான் அவனுக்கு புரிந்தது.. அந்த குழந்தை அவளின் அக்கா குழந்தை என்று..
அந்த வீடியோ காலில் ஜானுவின் திருமண பேச்சை எடுத்த போது அவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதும் ஜானுவின் மனதில் யாரும் இல்லை என்பது ராமிற்கு புரிந்தது..
தான் காதலித்த பெண்ணின் மனதில் வேறு எந்த ஆணும் இல்லை என்பதை ராம் புரிந்து கொண்டான்..
பின் இருவரும் ஒரே அலுவலத்தில் வேலை பார்ப்பதால்.., ஜானுவும் ராமுவும் ஒன்றாக பழக ஆரம்பித்தனர்.. ஜானுவிற்கும் ராம் மீது ஒரு அபிப்பிராயம் வர ஆரம்பித்தது..
அப்படியே நாள் போக ஒருநாள் ஜானுவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போகிறது.. இது ராமிற்கு தெரிய வர ஜானு தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு சென்று அவளை அழைத்து மருத்தவமனைக்கு கூட்டி சென்று ஒரு தாயை போல அவளை பார்த்துக்கொள்கிறான்…
பின் மருத்துவமனையில் இருந்து ஹாஸ்டலுக்கு அழைத்து செல்லாமல் அவனின் பெண் தோழிகள் தங்கி இருந்த வீட்டிற்கு அழைத்து சென்று இனி ஜானு உங்களுடன் தான் இருக்க போகிறாள்.. அவளை பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை.. இனி அவளும் உங்கள் தோழி என சொல்லுகிறான்..
ஜானு புரியாமல் ராமை பார்க்க.., உனக்கு ஹாஸ்டல் சாப்பாடு செட் ஆகல அதனால இனி நீ இங்க இரு உனக்கு என்ன வேணாலும் நாங்க பார்த்துக்கொள்கிறோம் என சொல்லி ஜானுவின் அனைத்து பொருட்களையும் ஹாஸ்டலில் இருந்து எடுத்து வந்து அவளிடம் கொடுக்கிறான்..
இத்தனை நாள் ஒரு ஜானுவின் மனதில் ஏதோவாக இருந்த ராம் மீது ஜானு ஆசைப்பட தொடங்குகிறாள்.. அதை ராம் உணர தொடங்கினான்..
ஜானுவிற்கு தான் நம் மீது ஆசைவந்து விட்டதே இப்போதாவது நம் காதலை சொல்லி விடலாம் என ராம் செல்கிறான்..
ராம் : இங்க பாரு ஜானு.., ஒரு காரில் தொடங்கிய நம் பயணம் காதல் பயணமாக மாற ஆசைப்படுகிறேன்.., காதலுக்கு ஜாதி, மதம், மொழி எதுவும் கிடையாது.
ஆனால் நம் காதலுக்கு ஒரு அழகான அன்பின் உணர்வு உண்டு.., அந்த உணர்வுகள் நீ பேச நினைப்பதை உன் கண்கள் பேசும்.. உன் தேவைகளை என் மனது புரிந்துக்கொள்ளும்..
காலம் தோரும் காதல் பயணம் செய்ய என்னோடு நீ வருவாயா என ராம் கேட்கிறான்…
ஜானு : ஓங்கி ராமின் கன்னத்தில் அரை விடுகிறாள்..
ஜானு ஏன் ராமை அடித்தால்.., அப்போ அவளுக்கு ராம் பிடிக்கவில்லையா அவள் சொல்ல வந்தது என்ன என்று அடுத்த கதையில் பார்க்கலாம்..