கள்ளக்குறிச்சியில் அதிகரிக்கும் கள்ளச்சாராய உயிரிழப்புகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பணியிடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் பகுதியில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் நீண்ட நாட்களாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக தொிகிறது. இங்கு நடைபெறும் சாராய விற்பனை குறித்து அப்பகுதி மக்கள் அதிகாாிகளுக்கும் தகவல் தொிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சாராயம் விற்பனை தொடா்ந்து நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியை சோ்ந்த சிலா், அப்பகுதியில் விற்பனை செய்யப்படும் சாராயத்தை குடித்ததாக கூறப்படுகிறது. கள்ளச்சாராயம் குடித்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிற்று எரிச்சல் வந்ததையடுத்து அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் முதற்கட்டமாக கணேசன் மகன் பிரவீன், தர்மன் மகன் சுரேஷ் , சேகர், ஜெகதீசன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

கள்ளச்சாராய ஊரல்கள் – கோப்பு படம்

மேலும் கிராமத்தில் சாராயம் குடித்த 30-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சாிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இவா்களையும் அங்கிருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

15-க்கும் மேற்பட்டோா் மேல்சிகிச்சைக்காக புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனை

கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிாிழப்பு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளச்சாராயம் குடித்து 9 போ் உயிாிழந்த சம்பவம் கருணாபுரம் கிராமத்தில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதாக ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதைபோல கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா

புதிய காவல் கண்கணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி

மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் பலர் உயிரிழப்புக்கு பாக்கெட் சாராயம் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் என்றும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்ட பின்னரே காரணம் தெரியவரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Stay connected
By Prasanth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *