நடிகர் அர்ஜுன் தனது மகளுக்கு ரூ.500 கோடி வரதட்சணை வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு இதுகுறித்து பேசி உள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர் “ நடிகர் அர்ஜுனுக்கு சென்னை போரூரில் நிறைய இடங்கள் உள்ளது.. ஏன் ஒரு கிராமமே அவருக்கு உள்ளது என கூறியுள்ளார்.
அவர் 500 கோடி, 1000 கோடி வரதட்சணை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. மேலும் அவர் பலகோடி மதிப்பு கொண்ட ஆடம்பர சொகுசு பங்களாவை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது. அவை எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை. அர்ஜுனுக்கு ஆண் வாரிசு இல்லை. எனவே அவரின் சொத்துக்கள் அனைத்தும் அவரின் 2 மகள்களுக்கு தான். ” என்று தெரிவித்தார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் கலந்து கொண்டார். அப்போது உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி தங்கள் காதலை இரு வீட்டிலும் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர்.
இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 10-ம் தேதி உமாபதி – ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது. கடந்த 14-ம் தேதி திருமண வரவேற்பு நடந்தது. இதில் ரஜினிகாந்த் மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஆக்சன் கிங் அர்ஜுனை தமிழ் சினிமாவில் விஜயகாந்த் தான் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
1984 ஆம் ஆண்டு கார்த்திக் வருகிறது. வெளியாகி இருந்த படம் நன்றி. இந்த படத்தின் மூலம் தான் அர்ஜுன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். ஆனால், இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. கன்னடத்தில் வெளியான தாலியா பாகியா என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் நன்றி. இந்த படத்தை நடிகர் ஏவிஎம் ராஜன் தான் தயாரித்திருந்தார். முதலில் இந்த படத்தில் அர்ஜுன் நடித்த வேடத்தில் விஜயகாந்த்தை தான் நடிக்க வைத்த இருந்தார்கள்.
ஆனால், தான் இந்த கதாபாத்திரத்துக்கு நடிக்க அதிக சம்பளம் கேட்டிருந்தார். அதை தர முடியாது என்று தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. பின் விஜயகாந்த், கன்னடத்தில் நடித்த நடிகரையே இந்த படத்திலுமே நடிக்க வைக்கலாமே என்று ஆலோசனை சொன்னார். அதற்கு பிறகுதான் அர்ஜுனனை நன்றி படத்தில் நடிக்க வைத்தார்கள். இந்த படம் பெரிய அளவு வெற்றியடையவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சினிமாவில் பிரபலமானார். இதற்கு காரணம் விஜயகாந்த் தான்.
கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் 90 கால கட்டம் தொடங்கி இன்று வரை நடித்து கொண்டு இருக்கிறார் .
கடைசியாக இவர் நடித்த நிபுணன் படத்தில், இவர் மீது மீ டூ புகார் கூறப்பட்டது. நிபுணன் படத்தில் நடித்த பொழுது சில காட்சிகளில் இறுக்கி கட்டிப்பிடித்தார், தனியாக அறைக்கு கூப்பிட்டார், உடல் ரீதியாக டார்ச்சர் கொடுத்தார் என அந்த படத்தில் அர்ஜுனுடன் கதாநாயகியாக இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் அடுக்கடுக்காக பல புகார்களை அளித்தார்.
ஆனால் அது உண்மை இல்லை என அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த நடிகையும் இதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை. ஆனால் ஆரம்பத்தில் அர்ஜுன் நடிகை நளினியை காதலித்ததாக கூறப்படுகிறது.
நளினியுடன் அர்ஜுன் 1985 ஆம் ஆண்டு அடுத்தடுத்து வெளியான எங்கள் குரல் மற்றும் திகில் நிறைந்த திரில்லர் படமான ‘யார்’ போன்ற படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுக்கும் இவர்களுக்குள் நல்ல ஒரு கெமிஸ்ட்ரியை உருவாக்கியது.