பலி எண்ணிக்கை 33 தாண்டியது – முதலமைச்சர் அவசர ஆலோசனை?

கள்ளக்குறிச்சி கள்ளசாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 33 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக கள்ளசாராயம் விற்பனை நடந்துள்ளது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர் .

கள்ளச்சாராய ஊரல்கள் – கோப்பு படம்

இந்நிலையில் கள்ளசாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 33ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சம்பவம் பற்றி அறிந்ததும் சுகாதாரத்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் கருணாபுரத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். சட்டப்பேரவையின் இன்றைய அலுவல் கூட்டம் முடிவடைந்த உடன் தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் காவல்துறை டிஜிபி, உளவுத்துறை டிஜிபி, மதுவிலக்கு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Stay connected
By Prasanth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *