பக்தி

விநாயகர் ஏன் முதல் கடவுள் ஆக இருக்கிறார்..? இந்த மந்திரம் மட்டும் சொன்னால் போதும்..!

முதன் முதலாக தாய் தந்தையை சுற்றி வந்து தாய் தந்தை தான் உலகம் என சொன்னவர் "விநாயகர்".., கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக திகழ்பவர் தான் "விநாயகர்" தடைகளை நீக்கி அனைத்து செயலிலும் வெற்றியை கொடுக்கும் தெய்வம் இவரே ஆவார். விநாயகரை கும்பிட்டு விட்டு நாம் எந்த வேலை செய்தாலும் நமக்கு வெற்றி கிடைக்கும். குறிப்பாக இந்த சில மந்திரங்களை சொல்லி வழிபட்டால்.., இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீக உண்மை. அந்த மந்திரங்களை பார்க்கலாம். விநாயகர் மந்திரங்கள் : "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதியே,வர வரத, சர்வ ஜனமே வஷமானாய ஸ்வாஹா" என்ற இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்கும் போது.., அது விநாயகருக்கு போற்றி செய்வதற்கு சமம் என சொல்லப்படுகிறது. ஓம் கணபதியே நமக : ஓம் கணபதியே நமக எனும் இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் வாழ்வின் துன்பங்கள் நீங்கி வெற்றி தரும் அதோடு..…
Read More
Vaikasi Vasantha Utsavam : வைகாசி வசந்த உற்சவத்தின் நிறைவு திருவிழா… கள்ளழகர் திருக்கோலத்தில் வரதராஜப் பெருமாள்…

Vaikasi Vasantha Utsavam : வைகாசி வசந்த உற்சவத்தின் நிறைவு திருவிழா… கள்ளழகர் திருக்கோலத்தில் வரதராஜப் பெருமாள்…

பரமக்குடி வரதராஜ பெருமாள் கோவில் வசந்த உற்சவம் நிறைவு பெற்று வரதராஜப் பெருமாள் வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் பூ பல்லக்கில் எழுந்தருளி கோவிலுக்கு திரும்பினார். கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் கோஷமிட்டு தரிசித்த பக்தர்கள். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி வசந்த உற்சவ விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி திருவிழாவாக வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. இந்த வைகாசி வசந்த விழாவினை முன்னிட்டு மே 23-ம் தேதி அன்று பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். பின்பு குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஊர்வலமாக வந்து பக்தர்கள், பொதுமக்களுக்கு காட்சி அளித்து வண்டியூரினை சென்றடைந்து தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிலையில், வசந்த உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் இருந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளி பரமக்குடி நகர் முழுவதும் வீதி உலா நடைபெற்று கோவிலுக்கு…
Read More