Prasanth

60 Posts
50 ஐ தொட்ட பலி எண்ணிக்கை – சோகத்தில் தமிழகம்

50 ஐ தொட்ட பலி எண்ணிக்கை – சோகத்தில் தமிழகம்

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது கள்ளச்சாராய கேன்கள் - கோப்பு படம் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளசாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 17 பேர் வரையில் உயிரிழந்தனர். கள்ளச்சாராய குடித்து பாதிக்கப்பட்டவர்கள் நள்ளிரவில் இறப்பின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து அதிகாலையில் உயிரிழப்பு 29-ஆக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முற்பகலில் இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 36 என ஆனது. நேற்று மாலை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது. கள்ளச்சாராய பாக்கெட்கள் - கோப்பு படம் இந்த நிலையில், விஷசாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 50 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது கள்ளக்குறிச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read More
உயரும் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை – கள்ளக்குறிச்சி செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்

உயரும் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை – கள்ளக்குறிச்சி செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் கள்ளக்குறிச்சி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்துள்ளது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஷ சாராய விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் காவல்துறை டி.ஜி.பி., உளவுத்துறை டி.ஜி.பி., மதுவிலக்கு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தை முடித்துக்கொண்டு கள்ளக்குறிச்சி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More
கள்ளச்சாராய உயிரிழப்பு – கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு

கள்ளச்சாராய உயிரிழப்பு – கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு

தமிழக சட்டசபை இன்று காலை கூடியது அவையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தலைமை செயலகம் தமிழ்நாடு சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருப்பினும் மக்களவைத் தேர்தல் காரணமாக மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடத்தப்படாமல் பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவை கூடியதும், விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என்றார். இதைத் தொடர்ந்து அவையின் இன்றைய நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.
Read More
மணப்பெண் கோலத்தில் பிரியா ஆனந்த்

மணப்பெண் கோலத்தில் பிரியா ஆனந்த்

தமிழ் திரையுலகில் அனைவராலும் அறியப்பட்ட நடிகை பிரியா ஆனந்த். நடிகை பிரியா ஆனந்த் ஒரு மாடலாக தொழில் துறையில் அறிமுகமானார். 2009 ஆம் ஆண்டு வெளியான வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு லீடர் திரைப்படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். தற்போது பல மொழி படங்களில் நடித்துவரும் பிரியா ஆனந்த் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் அண்மையில் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நடிகை பிரியா ஆனந்த் இளம் சிவப்பு நிற அகல போடருடன் கூடிய வெள்ளை மற்றும் கோல்டன் புடவையில் இருந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் மணப்பெண்னே பொறாமைபடுவார் என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
Read More
சினிமா தொழிலே வேணாம்..வெளியேறுகிறதா லைகா

சினிமா தொழிலே வேணாம்..வெளியேறுகிறதா லைகா

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைகா நிறுவனம். லைகா நிறுவனம் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு இனிமேல் சினிமா தொழிலே வேண்டாம் என்று விலக போவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் தமிழ் திரை உலகில் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளே வந்த பிறகுதான் நடிகர்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்தது. குறிப்பாக ரஜினி, விஜய் ஆகியோர்களின் சம்பளம் 200 கோடி ஆனதற்கு காரணம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரித்த சில படங்கள் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.குறிப்பாக ’ இந்தியன் 2’ திரைப்படம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தயாரிப்பில் உள்ளது என்பதும் அதேபோல் ’வேட்டையன்’ ’ விடாமுயற்சி’ போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் நிதி பற்றாக்குறை காரணமாக அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் லைகா நிறுவனம் தற்போது தயாரிப்பில் உள்ள…
Read More
படவாய்ப்பில்லை அதற்கு இப்படியா…கடற்கரையில் கேப்ரில்லா

படவாய்ப்பில்லை அதற்கு இப்படியா…கடற்கரையில் கேப்ரில்லா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளின் மூலம் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் கேப்ரில்லா. 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு அவர் எதிர்பார்த்ததை விட சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் ரொம்பவே பிஸியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, தற்போது கடற்கரையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
Read More
பலி எண்ணிக்கை 33 தாண்டியது – முதலமைச்சர் அவசர ஆலோசனை?

பலி எண்ணிக்கை 33 தாண்டியது – முதலமைச்சர் அவசர ஆலோசனை?

கள்ளக்குறிச்சி கள்ளசாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 33 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக கள்ளசாராயம் விற்பனை நடந்துள்ளது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர் . கள்ளச்சாராய ஊரல்கள் - கோப்பு படம் இந்நிலையில் கள்ளசாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 33ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சம்பவம் பற்றி அறிந்ததும் சுகாதாரத்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் கருணாபுரத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். சட்டப்பேரவையின் இன்றைய அலுவல் கூட்டம் முடிவடைந்த உடன் தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் காவல்துறை…
Read More

கள்ளக்குறிச்சியில் அதிகரிக்கும் கள்ளச்சாராய உயிரிழப்புகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணியிடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் பகுதியில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் நீண்ட நாட்களாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக தொிகிறது. இங்கு நடைபெறும் சாராய விற்பனை குறித்து அப்பகுதி மக்கள் அதிகாாிகளுக்கும் தகவல் தொிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சாராயம் விற்பனை தொடா்ந்து நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியை சோ்ந்த சிலா், அப்பகுதியில் விற்பனை செய்யப்படும் சாராயத்தை குடித்ததாக கூறப்படுகிறது. கள்ளச்சாராயம் குடித்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிற்று எரிச்சல் வந்ததையடுத்து அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் முதற்கட்டமாக கணேசன் மகன் பிரவீன், தர்மன் மகன் சுரேஷ் , சேகர், ஜெகதீசன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராய ஊரல்கள் -…
Read More
ஒரு பார்வையாலே வச்சு செஞ்சுட்டாலே…

ஒரு பார்வையாலே வச்சு செஞ்சுட்டாலே…

நந்திதா ஸ்வேதா என்று அழைக்கப்படும் ஸ்வேதா தமிழ் மற்றும் கன்னட,தெலுங்கு படங்களில் நடித்து வளர்ந்து வரும் திரைப்பட நடிகையாவார். 2008 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான "நந்தா லவ்ஸ் நந்திதாவில்" நடித்ததன் மூலம் அப் படத்தின் கதாபாத்திரத்தின் பேராலேயே இன்றும் விழிக்கப்படுகிறார். தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் அறிமுக திரைப்படத்திலேயே பெரிதும் பேசப்பட்ட இவரது திறமை இவருக்கு அடுத்தடுத்து தமிழில் பல வாய்ப்புகளை கொண்டுவந்து சேர்த்தன. தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளியான "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து இவர் நடித்த குமுதா கதாபாத்திரம் இன்று வரை தமிழ் ரசிகர்களிடையே குமுதா என்ற விருப்பப் பெயராலேயே அழைக்குமளவு புகழ் பெற்றது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மெல்லிய சிரிப்புடன் புடவையில் தான் இருக்கும்…
Read More
தனது மகளின் திருமணத்திற்கு நடிகர் அர்ஜுன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

தனது மகளின் திருமணத்திற்கு நடிகர் அர்ஜுன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

நடிகர் அர்ஜுன் தனது மகளுக்கு ரூ.500 கோடி வரதட்சணை வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த சூழலில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு இதுகுறித்து பேசி உள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர் “ நடிகர் அர்ஜுனுக்கு சென்னை போரூரில் நிறைய இடங்கள் உள்ளது.. ஏன் ஒரு கிராமமே அவருக்கு உள்ளது என கூறியுள்ளார். அவர் 500 கோடி, 1000 கோடி வரதட்சணை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. மேலும் அவர் பலகோடி மதிப்பு கொண்ட ஆடம்பர சொகுசு பங்களாவை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது. அவை எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை. அர்ஜுனுக்கு ஆண் வாரிசு இல்லை. எனவே அவரின் சொத்துக்கள் அனைத்தும் அவரின் 2 மகள்களுக்கு தான். " என்று தெரிவித்தார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் கலந்து கொண்டார்.…
Read More