இணையத்தின் அபரிவிதமான வளர்ச்சியினால் தங்களின் தனி திறமையை வீடியோ மூலம் பதிவிட்டு தங்கள் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு ரீல் ஜோடிய பத்திதான் இப்போம் பேசப்போறோம். கோயம்பத்தூர பூர்வீகமா கொண்டவங்கதான் கணேஷ் – திவ்யலட்சுமி. ஆரம்பத்துல தன்னோட தோல் பிரச்சனையால பாதிக்கப்பட்ட இவங்க ரீல்ஸ் மூலமா தன்னோட திறமையை காமிக்க ஆரம்பிச்சாங்க.
கணேஷ்
திவ்யலட்சுமி
இவங்களுக்கு ரீலிஸ்ல வந்த மோசமான கமெண்ட் அவங்கள ரொம்ப பாதிப்பை ஏற்படுத்துச்சுனு ஒரு காணொளில சொல்லிருந்தாங்க. இருந்தாலும் அத எதையும் பொருட்படுத்தாம ரீலிஸ்ல வெரைட்டி கொடுக்கலைனு நெனச்சு அவருடைய நண்பரான கணேஷ் கூட சேர்ந்து ஜோடியா வீடியோ போட ஆரம்பிச்சாங்க.
இரண்டு பேரும் சேர்ந்து போட்ட வீடியோ க்கு கமெண்ட்ஸ் எல்லாம் பாசிட்டிவா வந்துருக்கு. இவங்க இரண்டு பேரும் தளபதி விஜய் பாடல்களை தான் அப்படியே காப்பி – பேஸ்ட் பண்ணிருப்பாங்க. இது விஜய் ரசிகர்கள் மத்தியில பெரிய ஆதரவை பெற்றதுனு சொல்லலாம். கணேஷ் – திவ்யலட்சுமி இவங்க பண்ற ரீல் வீடியோ க்கு ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து மக்கள் மனசுல இடம் பிடிக்குதுன்னு சொல்லலாம்.
இவங்கள்ட்ட இன்னொரு தனித்துவம் இருக்கு. இவங்க இரண்டு பேரும் அவங்க பண்ற ரீல் வீடியோ க்கு ட்ரெஸ்ஸிங் ல இருந்து கேமரா லுக் , அந்த பாடலோடு லொகேஷன் எல்லாமே பாடலுக்கு ஏற்ற மாதிரியே இருக்குனு சொல்லலாம் . நீங்க யாரெல்லாம் இவங்களோட ரீலிஸ் பாத்துருக்கீங்கனு கீழ கமெண்ட் பண்ணுங்க .