பரமக்குடி வரதராஜ பெருமாள் கோவில் வசந்த உற்சவம் நிறைவு பெற்று வரதராஜப் பெருமாள் வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் பூ பல்லக்கில் எழுந்தருளி கோவிலுக்கு திரும்பினார். கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் கோஷமிட்டு தரிசித்த பக்தர்கள்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி வசந்த உற்சவ விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி திருவிழாவாக வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. இந்த வைகாசி வசந்த விழாவினை முன்னிட்டு மே 23-ம் தேதி அன்று பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். பின்பு குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஊர்வலமாக வந்து பக்தர்கள், பொதுமக்களுக்கு காட்சி அளித்து வண்டியூரினை சென்றடைந்து தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிலையில், வசந்த உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் இருந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளி பரமக்குடி நகர் முழுவதும் வீதி உலா நடைபெற்று கோவிலுக்கு திரும்பினர்.
இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு கோவிலுக்கு வரவேற்றனர். இதன் பின் வரதராஜப் பெருமாளுக்து சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபாரதணை நடைபெற்றது.