முதன் முதலாக தாய் தந்தையை சுற்றி வந்து தாய் தந்தை தான் உலகம் என சொன்னவர் “விநாயகர்”.., கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக திகழ்பவர் தான் “விநாயகர்” தடைகளை நீக்கி அனைத்து செயலிலும் வெற்றியை கொடுக்கும் தெய்வம் இவரே ஆவார்.
விநாயகரை கும்பிட்டு விட்டு நாம் எந்த வேலை செய்தாலும் நமக்கு வெற்றி கிடைக்கும். குறிப்பாக இந்த சில மந்திரங்களை சொல்லி வழிபட்டால்.., இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீக உண்மை. அந்த மந்திரங்களை பார்க்கலாம்.
விநாயகர் மந்திரங்கள் :
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதியே,
வர வரத, சர்வ ஜனமே வஷமானாய ஸ்வாஹா”
என்ற இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்கும் போது.., அது விநாயகருக்கு போற்றி செய்வதற்கு சமம் என சொல்லப்படுகிறது.
ஓம் கணபதியே நமக :
ஓம் கணபதியே நமக எனும் இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் வாழ்வின் துன்பங்கள் நீங்கி வெற்றி தரும் அதோடு.. நமக்கு எதிராக நடக்கும் பல எதிர்மறை எண்ணங்களை விலக்கி நேர்மறை எண்ணங்களை கொடுக்கும். ஒரு செயலை செய்யும் முன் இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு துவங்கினால் அது கட்டாயம் வெற்றி கொடுக்கும் என சொல்லப்படுகிறது.
ஓம் கபிலாய நமஹ :
ஓம் கபிலாய நமஹ இந்த மந்திரித்த உச்சரிப்பதை விட அதிக நோய் வயப்பட்டவர்கள்.., இந்த மந்திரத்தை மனதார துதிக்க வேண்டும்.., அப்படி செய்தால் உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ வழிபிறக்கும்.
கஷ்டம் என்றும் வரும் போதும்.., இந்த மந்திரத்தை உச்சரித்தால் துன்பங்கள் விலகி விடும் என சொல்லப்படுகிறது.
ஓம் கணேசாய நமஹ :
இந்த மந்திரத்தை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய ஒரு மந்திரம் ஏன் என்றால்.., இந்த மந்திரம் குழந்தையின் அறிவு திறனை அதிகரிப்பதோடு.. கல்வி அறிவையும் அதிகரிக்கும். என்பது ஐதீக உண்மை.