பெற்ற தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..! கவுன்ஸ்லிங்கில் வெளிவந்த அதிர்ச்சி..!

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் 2 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மாதம் ஒருமுறை பள்ளி மாணவர்களுக்கான கவுன்சலிங் நடப்பது வழக்கம்.. அந்த கவுன்சலிங்கில் மாணவர்கள் தங்களுக்கு மனதில் இருக்கும் சந்தோசம் மற்றும் சோகங்களை பற்றி பகிர்வது வழக்கம்.

அதாவது வீட்டில் உள்ள சூழ்நிலைகள் மட்டுமின்றி வெளியில் நடக்கும் கொடுமைகள் பற்றியும் மாணவர்கள் சொல்லுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் 13 வயது மாணவி கவுன்சலிங்கில் சொன்ன விஷயம் பலரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அந்த பெண் சொன்னது என்னவென்றால்.. சொந்த தந்தையே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தந்தை மட்டுமின்றி.., அவளது சித்தப்பா மற்றும் சித்தப்பா மகனும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள்.

அதை வீடியோவாக எடுத்து இதை வெளியில் சொன்னால்.., அந்த வீடியோவை இணையத்தில் விட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.. இப்படியே அந்த சிறுமியை 7 மாதங்களாக துன்புறுத்தி வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கவுன்சலிங்கில் சிறுமி கொடுத்த தகவலின் படி போலீசில் புகார் அளித்து மூன்று பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்கள் இதுபோன்ற துன்புறுத்தலில் ஈடுபட்டாலும் இதை பற்றி அச்சமின்றி பாதிக்கப்பட்டவர்கள் சொல்ல வேண்டுமென காவலர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும் அந்த சிறுமி மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவமனையில் ஆலோசனை கொடுக்கப்பட்டு வருகிறது.

Stay connected
By Logeshwari V

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *