16
Jun
👉பிறருக்கு உதவி செய்தல், மற்றவர்களின் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறுவயதிலேயே லிங்கனிடம் இருந்தது. எப்போதும் கலகலப்பாக பழகுதல், கதை சொல்லுதல், வேடிக்கையாக பேசுதல் ஆகிய ஆப்ரகாம் லிங்கனின் குணங்கள் அவரின் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச்செய்தன. ⭐ஆப்ரகாம் லிங்கனுக்கு, 16 வயதாகும் போது நீதிமன்றங்களில் நடக்கும் ஒரு வழக்கை நேரில் பார்த்ததிலிருந்து வக்கீல் ஆக வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தது. தன் 21 வயது வரை அப்பா, சித்தியுடன் இருந்தார். பிறகு, தனியாக இருக்க முடிவு செய்தார். ⭐ஒரு முறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும், இரும்புக்கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும், சாட்டையால் அடிக்கப்படுவதையும், ஒட்டுமொத்தமாக கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டு இவரின் மனம் துடித்தது. இந்த கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளை கண்டறிய…