உதயநிதி ஸ்டாலின்

சனாதான ஒழிப்பு..! உதயநிதிக்கு பெங்களூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு..!

சனாதான ஒழிப்பு..! உதயநிதிக்கு பெங்களூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு..!

கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என கூறியுள்ளார். அவர் சனதானம் என்ற வார்த்தையை ஒழிக்க வேண்டும் என சொன்ன வார்த்தையை மாற்றி சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என சொன்னதாக பாஜகவினர் ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் அது பெரும் சர்ச்சையை கிளப்பியது.. அதன் பின் உதயநிதி ஸ்டாலினிற்கு எதிராக பல்வேறு இடங்களில் இருந்து பாஜக தரப்பில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கர்நாடகா மாநிலம் பெங்களூர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக சமூக ஆர்வலர் பரமேஸ் என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில்…
Read More
உயரும் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை – கள்ளக்குறிச்சி செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்

உயரும் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை – கள்ளக்குறிச்சி செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் கள்ளக்குறிச்சி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்துள்ளது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஷ சாராய விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் காவல்துறை டி.ஜி.பி., உளவுத்துறை டி.ஜி.பி., மதுவிலக்கு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தை முடித்துக்கொண்டு கள்ளக்குறிச்சி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More