ஜோடி ஆர் யு ரெடி இந்த நிகழ்ச்சிய தொகுத்து வழங்குற தொகுப்பாளினி ஏஞ்சலின் பத்தி தான் இப்ப நாம பாக்க போறோம். இவங்க நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்காங்க. இவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகணும்னு ரொம்ப ஆசையாம்.
அதுவும் பிபிசி சேனல்ல தொகுப்பாளர் ஆகணும்னு ரொம்ப ஆசையாம். அதனாலயே இவங்க படிக்கும் போதே Journalist படிப்பு எடுத்து படிச்சுருக்காங்க. படிச்சிட்டு இருக்கும் போது இன்டர்ன்ஷிக்காக சன் டிவிக்கு போய் இருக்காங்க ஏஞ்சலின். அங்க மூவி ரிலீஸ் பத்தி எல்லாம் இன்டெர்ன்ஷிப்ல பண்ணியிருக்காங்க.
அப்போ அங்க எதார்த்தமா ஒரு ஆடிஷனும் அட்டென்ட் பண்ணி இருக்காங்க. அந்த ஆடிஷன்ல நமக்கு தான் எல்லாம் தெரியுமேனு ஒரு மைண்ட் செட்டோட அங்க போனாங்களாம். அங்க போன கிட்டதட்ட 4000 பேர் அந்த ஆடிஷனுக்கு வந்து இருந்தாங்களாம். என்னடா இவ்வளவு பேர் வந்திருக்காங்கன்னு ரொம்ப யோசிச்சிருக்காங்க.
மீடியாக்கு போறேன்னு சொன்னதுமே அவங்க பேமிலி சைட்ல ரொம்பவே சப்போர்ட் பண்ணி இருக்காங்க. குறிப்பா அவங்க அப்பா ரொம்ப ரொம்ப சப்போர்ட் பண்ணிருக்காங்க. சின்ன சின்ன விஷயங்கள் பண்ணாலும் அவங்க அப்பா இவங்களை கூப்பிட்டு பாராட்டி இருக்காங்க. இவங்களுக்கு ஆடிஷன்ல நம்பிக்கை இல்லையா நம்ம சும்மா தானே போறோம் நம்ம எங்க செலக்ட் ஆக போறோன்னு நினைச்சுட்டு இருந்திருக்காங்க.
இரண்டு வாரம் கழிச்சு அவங்களுக்கு ஒரு கால் வந்திருக்கு. அந்த ஒரு போன் கால்ல தன்னுடைய வாழ்க்கையே மாறிடுச்சுன்னு சொல்லி இருக்காங்க. அதுதான் அவங்களுக்கு ஒரு திருப்புமுனையாய் இருந்திருக்கு.
சன் நியூஸ் சேனல் வேலை பாக்குற வாய்ப்பு கிடைச்சிருக்கு. நச்சுனு நாலு சினிமா என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்காங்க. இவங்க பாரதிராஜா இருந்து இப்ப இருக்கிற நடிகர்களின் நிறைய பெற இன்டர்வியூ எடுத்து இருக்காங்க இவங்க எஸ் எஸ் மியூசிக் சேனல்ல இன்டர்வியூ எடுக்கும்போது இவங்க கேக்குற கேள்விகள் பார்த்து கெஸ்ட் ஷாக் ஆவாங்கலாம். எல்லா கேள்விகளையும் டைரக்டா கேட்ருவாங்கலாம்.
இவங்க இவ்ளோ அழகா இருக்காங்கன்னு இவங்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும் ஒரு பிரபல நடிகையையும் இவங்களுக்கு பெரிய ரசிகரா இருந்திருக்காங்க. அது வேற யாரும் இல்லங்க. நடிகை ஸ்ரேயா தான். நான் அழகா இருக்கேனோ இல்லையோ இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்குற ஏஞ்சலின் ரொம்ப அழகா இருக்காங்கன்னு மேடையிலேயே கூப்பிட்டு சொல்லி இருப்பாங்க.
மைக் கிடைச்சா போதும் பேசிக்கிட்டே இருப்பாங்களாம். ஏஞ்சலின் அவங்களோட ரோல் மாடல் யாருனு கேக்கும் போது டிடி அக்கானு சொல்றாங்க .அவங்கள பார்த்து தான் தொகுப்பாளராக ஆசை பட்டேனு சொல்ராங்க.