மண்பானையும் திறமையும்…

மண்பானை கிட்ட ஒருத்தன் கேட்டான் கொட்டுற மழையில மட்டும் இல்லாம கொளுத்துற வெயிலையும் உன்னால மட்டும் ஏன் இப்படி சில்லுனு இருக்க முடியுது. அதுக்கு மண்பானை சொல்லுச்சு என்னுடைய ஆரம்பமும் முடிவும் மண் தான்னு எனக்கு தெரியும். யார் ஒருத்தர் தன்னுடைய தொடக்கத்தையும் முடிவையும் உணர்ந்து இருக்காங்களோ அவங்க எதுக்காக சூடாக போறாங்க, குளிர்ந்து தானே இருப்பாங்க அப்படின்னு சொல்லுச்சு மண்பானை.

இந்த மண்பானை மாதிரி தாங்க நாமளும் நமக்குள்ள இருக்க திறமையை நம்ம உணர்ந்தாலே போதும் நாம சக்ஸஸ் அடையறது ரொம்பவே ஈசி ஆயிரும். உங்க நண்பர்களுக்கு இடையே நிறைய திறமைகள் வச்சுக்கிட்டு அது உணராமல் இருக்காங்கனா அவங்களுக்கு இந்த லிங்கை ஷேர் பண்ணுங்க.

Stay connected
By Prasanth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *