கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளதை அடுத்து நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார் .
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளசாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 17 பேர் வரையில் உயிரிழந்தனர்.
நள்ளிரவில் இறப்பின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து அதிகாலையில் உயிரிழப்பு 29-ஆக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முற்பகலில் இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 36 என ஆனது. நேற்று மாலை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், விஷசாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 50 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது கள்ளக்குறிச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்க்கலாம்