முருங்கை கீரையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ அதிகமாக உள்ளது. அதேப்போல் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. மேலும் முருங்கை கீரையில் தாவர அடிப்பையிலான இரும்புச்சத்து, ஆண்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின் மற்றும் உடலுக்கு தேவையான அமினோ ஆசிட் ஆகியவை பாலை விட அதிகமாக உள்ளன.
பால் பொருட்களுக்கு மாற்றான சத்துள்ள உணவுகளை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் தேடும் அத்தனையும் முருங்கைகாயில் உள்ளது. பல வகையான வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்த முருங்கை காய் சூப்பர் உணவாக கருதப்படுகிறது. ஆனால் பாலில் உள்ள அத்தனை நன்மையும் இதில் கிடைக்குமா?
இயற்கையான மல்டி வைட்டமின் என முருங்கை கீரையை அழைக்கும் ஹெல்த் கோச் திக்விஜய் சிங், இதை தாராளமாக பாலுக்கு மாற்றாக எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறுகிறார். முருங்கை மரத்தை அதிசய மரம் என்றே அழைப்பார்க்கள். அவ்வளவு ஊட்டச்சத்துகள் இதில் உள்ளது. பாலை விட முருங்கை கீரையில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக கால்சியம் சத்துள்ளது. ஆகையால் தினமும் பால் அருந்த முடியாதவர்களுக்கு இது சிறந்த மாற்றாக இருக்கும்.
முருங்கை கீரையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ அதிகமாக உள்ளது. அதேப்போல் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. மேலும் முருங்கை கீரையில் தாவர அடிப்பையிலான இரும்புச்சத்து, ஆண்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின் மற்றும் உடலுக்கு தேவையான அமினோ ஆசிட் ஆகியவை பாலை விட அதிகமாக உள்ளன.
ஆனால் பாலுக்கு மாற்றாக முருங்கை கீரையை எடுத்துக்கொள்ளும் போது, கொழுப்பு மற்றும் புரதச்சத்து நமக்கு குறைவாக கிடைக்கிறது. இதை ஈடுகட்ட நாம் வேறு உணவுகளை நாட வேண்டியிருக்கும்.முருங்கை கீரையிளில் அதிக நார்ச்சத்து இருந்தாலும், அதிகளவு உண்ணும்போது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். மேலும் முருங்கை கீரையின் சுவை பலருக்கும் பிடிக்காது என்பதால் பாலுக்கு மாற்றான உணவாக இதை எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
லாக்டோஸ் சகிப்பின்மை உடையவர்கள் அல்லது வீகன் டயட் பின்பற்றுபவர்களுக்கு முருங்கை கீரை பயனுள்ளதாக இருக்கும். தாவர உணவுகளை மட்டுமே சார்ந்திருக்கும் பலருக்கும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைப்பது சவாலாக இருக்கும் நிலையில் இது நிச்சியம் அருமருந்தாக இருக்கும். எனினும் பாலில் இருப்பது போல் முருங்கை கீரையில் வைட்டமின் பி12 அல்லது வைட்டமின் டி சத்துகள் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகையால் பாலில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால், முருங்கை கீரையோடு வேறு சத்துள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும்.
நீண்ட காலத்திற்கு பயன் தரும் முருங்கையை பயிர் செய்வதற்கு பால் பண்ணையை விட குறைவான தண்ணீரே தேவைப்படும். மேலும் இது அனைத்து கால நிலையிலும் வளரக்கூடியது. உரமோ புச்சிக்கொல்லியோ கூட பெரிதாக தேவைப்படாது. ஆகையால் பால் உற்பத்தியில் வெளியாகும் பசுமை குடில் வாயுக்களை விட முருங்கை குறைவான சுற்றுச்சூழல் தாக்கத்தையே உண்டாக்குகின்றன.
முருங்கை கீரையில் பல ஊட்டச்சத்து நன்மைகள் இருந்த போதிலும், சுற்றுச்சூழலுக்கு இதனால் குறைவான பாதிப்பே என்று தெரிந்த போதிலும் உங்களுக்கு தேவையான அனைத்துச் ஊடச்சத்துகளும் கிடைப்பதற்கு உறுதி செய்த பிறகே பாலுக்கு மற்றாக இதை டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை மறவாதீர்கள்.